தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியும், இளம்ஹீரோ விஜய் தேவரகொண்டாவும் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
டோலிவுட்டின் மூத்த நடிகரும், வளர்ந்து வரும் நட்சத்திரமும் இந்த நிகழ்ச்சியில் தங்களது சிக்கனமான மனநிலையை வெளிப்படையாகக் கூறி, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
இதில் விஜய் தேவரகொண்டா பேசும்போது, ” என்னுடைய வாழ்க்கை நிறைய மாறிவிட்டது. ஆனாலும் இன்னும் மிடில்கிளாஸ் மனநிலையில் தான் உள்ளேன். உதாரணமாக நான் பயன்படுத்தும் ஷாம்பு தீர்ந்தாலும் அதில் தண்ணீர் ஊற்றி வீணாக்காமல் பயன்படுத்துவேன்”, என்றார்.
தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி, ”எங்கள் வீட்டில் யாரும் சிக்கனமாக இருக்க மாட்டார்கள். வீட்டைவிட்டு வெளியில் சென்றால் எல்லா விளக்குகளையும் அப்படியே தான் எரிய விட்டுச்செல்வார்கள்.
ஆனால் வீட்டில் வீணாக மின்விளக்குகள் எரிந்தால் அதை அணைத்து விடுவேன். குளிக்கும் சோப் தீரும் நிலையில் இருந்தாலும், அதை மற்றொரு முழு சோப்புடன் சேர்த்து முழுவதும் பயன்படுத்துவேன். இதேபோல நீரையும் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
சமீபத்தில் ராம்சரண் தன்னுடைய மனைவியுடன் பாங்காக் செல்லும்போது வீட்டில் விளக்குகளை அணைக்காமல் சென்று விட்டார்.
நான் தான் சென்று அவை எல்லாவற்றையும் அணைத்து வைத்தேன். ஆரம்ப காலத்தில் திரைத்துறையில் நுழைந்த போது இந்த சிக்கனமான குணத்தால் பலரும் என்னை கேலி செய்தனர்”, என்றார்.
இதன் மூலம் சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா இருவரும் தாங்கள் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் பழசை மறக்கமாட்டோம் என்று அழுத்தம், திருத்தமாகக் கூறியுள்ளனர். இவர்களின் இந்த வெளிப்படை தன்மையையும், சிக்கனத்தையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
– இரசிக பிரியா மாணவ நிருபர்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Paiyaa: கார்த்தியின் ஜோடியாக ‘நடிக்க’ வேண்டியது இவர் தானாம்!
‘ஹனுமான்’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!
நம்பர் 1 இடத்தை தக்கவைத்த திரிஷா… சம்பளம் எவ்ளோன்னு பாருங்க!