இந்துத்துவ, ஆதிக்கசாதி ஆதரவு இயக்குனர் மோகன் ஜி இயக்கி இருக்கும் திரௌபதி 2 படத்தில் ஒரு பாடலைப் பாடினார் சின்மயி. அந்தப் பாடல் நன்றாகவே இருக்கிறது .
ஆனால் திடீர் என்று சின்மயியிடம் இருந்து ஒரு விழிப்புணர்ச்சி அறிக்கை.
‘எம் கோனே’ என்ற அந்தப் பாடல் பாடியதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஜிப்ரானை எனக்கு 18 வருடங்களாக தெரியும். நான் ஜிப்ரான், அலுவலகத்தில் அழைத்ததால் பாடப் போனேன், . ஆனால் அங்கே ஜிப்ரான் இல்லை. இப்போதுதான் எல்லாமே புரிகிறது, .முன்பே தெரிந்து இருந்தால் நான் பாடி இருக்கவே மாட்டேன். அந்த கொள்கைக்கும் (அதாவது மோகன் ஜி யின் அரசியல் கொள்கை) எனக்கும் நிறைய முரண் ?!?!?) உள்ளது . இதுதான் முழு உண்மை எனவே அந்த பாடல் பாடியதற்காக வருத்தப்படுகிறேன்” என்று அதில் சொல்லி இருக்கிறார் சின்மயி. (அம்மா.. இவ்வளவு நாளா எங்கம்மா இருந்தீங்க?)
முதல் பாயிண்ட்.
ஜிப்ரான் வரச் சொல்லித்தான் சின்மயி போயிருக்கிறார். அங்கே ஜிப்ரான் இல்லை. எனில் ஜிப்ரான் எங்கே என்று சின்மயி கேட்டு இருக்க வேண்டும். அவருக்கு போன் பண்ணி ”எங்க சார் இருக்கீங்க?” என்று கூட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம் . அப்படி கேட்டு இருந்தால் , ” சின்மயி சின்மயி .. அங்க புலி சிங்கம் கரடி எல்லாம் இருக்கு. ஓடி வந்துரு” என்று ஜிப்ரான் சொல்லி இருப்பாரே?
ஜிப்ரான் வரச் சொல்லித்தான் சின்மயி போயிருக்கிறார் . அவரை யாரும் பழைய சினிமாவில் வருவது போல கண்ணைக் கட்டி அழைத்துப் போகவில்லை. பிடிக்கலைன்னா பாடாம வந்திருக்கலாமே சின்மயி?
மோகன் ஜி என்ன, சினிமாவில் கட்டிப் போட்டு சொத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போடச் சொல்வது போல , கட்டிப் போட்டு சாட்டையால் அடித்தா பாடச் சொன்னாரா?
இப்போதுதான் எனக்குப் புரிகிறது என்கிறார் சின்மயி. சின்மயி என்ன பாப்பாவா? வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாதா? மீன்களை மீனவர்கள் சுடுவது தப்பில்லை என்றால், மீனவர்களை இலங்கை ராணுவம் சுடுவது மட்டும் என்ன தப்பு?” என்று முழங்கிய அரசியல் மாமேதை அல்லவா நீங்கள். உங்களுக்கு ஒரு விஷயம் லேட்டாக புரியும் என்பதை நம்ப முடியவில்லை சின்மயி.
அது கூட பரவாயில்லை.
‘ அந்த கொள்கைக்கும் (அதாவது மோகன் ஜி யின் அரசியல் கொள்கை) எனக்கும் நிறைய முரண் ?!?!?) உள்ளது . ‘
சத்தியமா புரியல… நீங்க டைரக்ட் ஆர் எஸ் எஸ் . அவர் இந்துத்வ ஆதரவாளர் . இதில் என்ன முரண்?
அப்படி முரண் இருந்தால் இப்போது கூட பாதகமில்லை . பாட வாங்கிய காசை திருப்பிக் கொடுத்து விடலாமே. கொள்கை முக்கியம் இல்லையா சின்மயி?
இவர் மட்டுமல்ல
நடிகை ஷீலா ராஜேந்திரனும் ஒரு பேட்டியில்,” மோகன் ஜி யின் இரண்டு படங்களில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் . துக்கம் தொண்டையை அடைகிறது” என்று பேசி இருக்கிறார்.
வாய்ப்பு இல்லாத போது கெஞ்சிக் கூத்தாடி வாய்ப்பு வாங்கி பிரபலம் ஆக வேண்டியது . பிரபலம் ஆன பிறகு ஏற்றி விட்ட ஏணியையே கேவலப்படுத்தி யோக்கியமுகம் காட்டுவது என்ன நியாயம் ?
மோகன் ஜி க்கே இது நடந்தாலும் சின்மயி, ஷீலா ராஜேந்திரனின் பேச்சு துரோகத்தனம்
வர வர இந்த ஒண்ணும் தெரியாத பாப்பாக்களின் தொல்லை தாங்க முடியல
– ராஜ திருமகன்
