கிச்சன் கீர்த்தனா : சைனீஸ் ஸ்பிரிங் ரோல்!

Published On:

| By Prabakaran SEO

Chinese spring roll recipe

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கேக் வகைகள் அதிகம் சாப்பிட்டிருக்கும் நிலையில் காரமாக, சுவையாக, வித்தியாசமாக எதையாவது சாப்பிட மனது ஏங்கும். அதற்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த சைனீஸ் ஸ்பிரிங் ரோல். கேக்குடன் சேர்த்து இந்த ஸ்பிரிங் ரோலையும் சாப்பிட்டு கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள். Chinese spring roll recipe
என்ன தேவை?

மைதா மாவு – 2 கப்
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
ஃபில்லிங் செய்ய…
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – கால் கப்
மெலிதாக நீளமாக நறுக்கிய செலரி – 2 டேபிள்ஸ்பூன்
சில்லிசாஸ், தக்காளி சாஸ் – தலா ஒரு டீஸ்பூன்
துருவிய காலிஃபிளவர் – 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்.

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஃபில்லிங்குக்கு உரிய பொருட்களை சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்துக் கிளறி நன்கு வேகவிட்டு மசாலா தயார் செய்து ஆறவிடவும். 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். மைதா மாவுடன் சமையல் சோடா, உப்பு, சூடுபடுத்திய எண்ணெய் சேர்த்துப் பிசைந்து, பிறகு தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசைந்து (மாவு நீளும் தன்மை பெறும்வரை பிசையவும்), அரை மணி நேரம் ஈரத்துண்டு போட்டு மூடி வைக்கவும்.

ADVERTISEMENT

பிறகு, பிசைந்த மாவை எண்ணெய் தடவி சமையல் மேடையில் பரோட்டாவுக்கு செய்வது போல நன்கு அடித்துக் கொள்ளுங்கள். பிறகு 2 சிறிய உருண்டைகளை சப்பாத்திகளாகத் தேய்த்து, ஒரு சப்பாத்தியில் ஃபில்லிங்கை வைத்து, ஓரத்தில் மைதா + நீர் குழைத்து பசைபோல் தடவி, மற்றொரு சப்பாத்தியால் மூடி, பாய் போல் சுருட்டவும். பிறகு 3 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும் (எல்லா ரோல்களையும் இதேபோல் செய்யவும்). பிறகு, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும் (கட் செய்தும் பரிமாறலாம்).

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

சண்டே ஸ்பெஷல்: ரெடி டு குக் உணவுகள்… ஆபத்தை அறிந்துகொள்ளுங்கள்!

கிச்சன் கீர்த்தனா: ரைஸ் டிக்கியா வித் சாஸ்

Chinese spring roll recipe

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share