மோடியுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்திப்பு- சீனா வருகை தர அழைப்பு!

Published On:

| By Mathi

Chinese Foreign Minister Wang Yi Meets PM Modi

பிரதமர் நரேந்திர மோடியை இந்தியா வருகை தந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யியை நேற்று ஆகஸ்ட் 19-ந் தேதி சந்தித்தார்.

சீனாவின் தியாஞ்ஜினில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளுமாறு சீனா அதிபர் ஜி விடுத்த செய்தியையும், அழைப்பையும் வாங் யி, பிரதமர் மோடியிடம் வழங்கினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இணைந்து தாம் தலைமை தாங்கிய 24-வது சிறப்பு பிரதிநிதிகள் கூட்டம் மற்றும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருடனான இருதரப்பு சந்திப்பு குறித்த தனது நேர்மறையான கருத்துக்களையும் வாங் யி பகிர்ந்து கொண்டார்.

ADVERTISEMENT

எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, எல்லைப் பிரச்சினைக்கு நேர்மையான, நியாயமான, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு கசானில் சீனா அதிபர் ஜி உடனான சந்திப்பிற்கு பிறகு இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள நிலையான மற்றும் நேர்மறையான முன்னேற்றத்தை பிரதமர் மோடி வரவேற்றார். கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது உட்பட பரஸ்பர மரியாதை, ஆர்வம் மற்றும் உணர்வுபூர்வமாக அதிபருடனான சந்திப்பு வழிநடத்தப்பட்டது.

ADVERTISEMENT

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டிற்கான அழைப்பிற்காக, பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜி-க்கு நன்றி தெரிவித்தார். உச்சிமாநாட்டிற்கு சீனா தலைமை தாங்குவதற்கு அவர் ஆதரவளித்ததுடன், தியான்ஜினில் சீனா அதிபரை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார். இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான நிலையான, கணிக்கக்கூடிய மற்றும் ஆக்கபூர்வமான உறவுகள் பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று பிரதமர் மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share