மக்கள் போராட்டத்துக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும்: ஐ.நா வலியுறுத்தல்

Published On:

| By Minnambalam

அமைதி வழியில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு சீன அரசு உரிய மதிப்பு அளிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை  வலியுறுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் சீனாவில் தற்போது வேகமெடுத்து வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக 40,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வைரஸ் பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாகாணங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருகிறது.

இதற்கிடையே, சீன அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

ADVERTISEMENT

அவர்கள் சீன அரசுக்கு எதிராகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர்.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் சீனா முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமைதி வழியில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு சீன ஆட்சியாளர்கள் உரிய மதிப்பு அளிக்க வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளது.

-ராஜ்

ஜோதிகாவுக்கு பதிலாக கங்கனா ரனாவத்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share