அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை!

Published On:

| By christopher

சீனாவில் ஐபோனின் புதிய தயாரிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள், அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் முக்கிய தயாரிப்பான ஐபோன், ஐபேட் போன்றவற்றுக்கு உலகின் பல நாடுகளிலும் அதிக மவுசு உள்ளது. சீனாவிலும் இந்த ஐபோனை பலர் விரும்பி பயன்படுத்துகின்றனர். அதன் புதிய தயாரிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகிறது.

இந்த நிலையில் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான மோகத்தைக் குறைத்து இணைய பாதுகாப்பை அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது. அதன்படி ஐபோன் மற்றும் வெளிநாட்டு முத்திரை உள்ள கருவிகளை அரசு ஊழியர்கள் தங்களது பணியின்போது பயன்படுத்தக் கூடாது என சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் டிக்-டாக் செயலிக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்ட தடையின் எதிரொலி என இது கருதப்படுகிறது. எனினும் இதுகுறித்து சீன அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க விரும்பவில்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார்.

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

சண்டே ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யப்படும் பனீர் ஆரோக்கியமானதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share