சிறார் ஆபாச வீடியோக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக மணப்பாறையில் சிபிஐ அதிகாரிகள் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பூமாலைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா வயது 45. இவரது பெற்றோர்கள் சுகாதாரத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்.
ராஜா சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் வேலை பார்த்துள்ளார். இன்று(டிசம்பர் 1) காலை இவரது வீட்டில் டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் மணப்பாறை போலீசாரை வரவழைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறார் ஆபாச வீடியோக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகவும் அதனடிப்படையில் சிபிஐ அதிகாரிகளால் இந்த சோதனையானது நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
காலை 6.30 மணி முதல் தற்போது வரை 6 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. சோதனைக்குப் பிறகே முழு விபரம் தெரியவரும்.
கலை.ரா
