தீபாவளி பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் அவரது பெரியப்பா மீது 2 பிரிவுகளின் கீழ் இன்று (நவம்பர் 13) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. எனினும் பல்வேறு இடங்களில் உயிரை பறித்த அசாம்பவித சம்பவங்களும் ஏற்பட்டு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் – அஸ்வினி தம்பதியர். இவர்களுக்கு நவிஷ்கா என்ற 4 வயது மகள் இருந்தார்.
தீபாவளியை முன்னிட்டு நேற்று ரமேஷ் மற்றும் அவரது அண்ணன் விக்னேஷ் நாட்டுப் பட்டாசுகளை வெடித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடிக்கும் நேரத்தில் சிறுமி நவிஷ்கா அதன் அருகே சென்றுவிட்டார்.
அப்போது நாட்டுப் பட்டாசு வெடித்ததில் சிறுமியின் கை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலியில் அலறி துடித்த நவிஷ்காவை அவரது பெற்றோரும், உறவினர்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுமி நவிஷ்கா உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி காண்பவர்களின் நெஞ்சை கரையச் செய்தது.
இந்த நிலையில், அஜாக்கிரதையாக செயல்பட்டு 4 வயது குழந்தைக்கு மரணம் ஏற்படுத்தியதாக சிறுமியின் பெரியப்பா விக்னேஷ் மீது கலவை காவல் நிலைய போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள விக்னேஷுக்கும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நெதர்லாந்துக்கு எதிராக 9 பவுலர்கள் பந்துவீசியது ஏன்?: ரோகித் விளக்கம்!
இந்திய பொருளாதார வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது: ஜெய்சங்கர்