கோழி செய்த சேட்டை… பழைய ஜீன்சில் பயிர் வளர்த்த பலே சிறுவன்!

Published On:

| By Kumaresan M

child farmer

விதைகளை கோழிகள் தொடர்ந்து, தின்று அழித்து வந்ததால் சிறு வயது விவசாயி  ஒருவன் பழைய ஜீன்ஸ்களில் பயிர்களை வளர்த்து ஆச்சரியப்படுத்தியுள்ளான்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூர் என்ற இடத்தை சேர்ந்த அபினவ் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு சிறு வயது முதலே விவசாயத்தில் அதீத ஈடுபாடு இருந்தது. தன் வீட்டை ஒட்டிய இடத்தில் சிறு அளவில் அபினவ் பயிர்களை வளர்த்து வந்தான்.

ஆனால், சிறுவன் பயிரிட்ட விதைகளை கோழிகள் கொத்தித் தின்று அழித்து வந்தன. இதனால், சிறுவன் மாற்றி யோசிக்க தொடங்கினான்.

பயிர்களுக்கும் விதைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பயிரிடுவது பற்றி யோசித்தான். பிளாஸ்டிக் பைகளில் பயிரிட்டால் அவை மக்காது. நிலத்துக்கும் கெடுதலை விளைவிக்கும் .

இதையடுத்து, வீட்டில் இருந்த பழைய ஜீன்ஸ் பேன்ட்டுகளை மண் நிரப்பி அதில் பயிரிட தொடங்கினான். அந்த முயற்சியிலும் அபினவ் வெற்றி பெற, பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் தனது நிலத்தையே அபினவுக்கு கொடுத்து, அதிலும் பயிர்களை வளர்க்கும்படி கூறி ஊக்கப்படுத்தினார். இதனால், அபினவ்  பெரும் உற்சாகமடைந்துள்ளான்.

பொதுவாக வெற்றி கண்ட பின்னர்தான் மற்றவர்கள் திரும்பி பார்ப்பார்கள் என்று கூறுவார்கள். இது அப்படியே அபினவுக்கு பொருந்தும். அபினவ் சிறு வயதிலேயே விவசாயத்தில் ஈடுபட்டதை அவனது குடும்பத்தினர் ககண்டு கொள்ளவில்லை. அலட்சியம்தான் செய்தனர்.

ஆனால்,கொரோனா சமயத்தில் அபினவ் பயிரிட்ட  பயிர்களில் அமோகமாக விளைச்சல் இருந்தது.  தன் உழைப்பில் கிடைத்த வாழைப்பழங்கள், காய்கறிகளை அந்த சிறு(வன்) விவசாயி பறித்துக் கொண்டு வந்து பெற்றோரிடத்தில் கொடுத்தான்.

அப்போதுதான், தனது மகனின் திறமையை கண்டு வியந்த பெற்றோர் ஊக்கப்படுத்த தொடங்கினார்கள்.

செல்லில் திளைத்துக் கொண்டிருக்கும் செல்லங்களுக்கு மத்தியில் ஒரு சொக்கத்தங்கம் கிடைத்திருக்கிறான் என்று கேரள மீடியாக்கள் எல்லாம் அபினவ்வை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

-எம்.குமரேசன் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் நிகழ்த்திய அதிசயம்! அந்த பெண் இப்போ ஹேப்பி!

வினோத் போகத்துக்கு வெள்ளி கிடைக்குமா? : இன்று இரவு தீர்ப்பு!

தொடரும் துயரம் : தருமபுரி மாணவிக்கு காஷ்மீரில் நீட் தேர்வு மையம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share