அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை!

By Kavi

|

Published on 8 Jul 2025, 4:21 PM

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட கூடாது என்று தலைமை செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். Chief Secretary warns government employees

மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் பொதுவேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுகவின் தொழிற்சங்கமான தொமுச, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசி மற்றும் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இந்த நிலையில், நாடு முழுவதும் நாளை நடக்கும் வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் நிறுத்தம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Chief Secretary warns government employees

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel