லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மதுரையில் அதிமுக சார்பில் இன்று(ஜூன் 21) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்,
”டாஸ்மாக்கில் ஒரு நாளுக்கு ஒரு கோடி பாட்டில் விற்பனையாகிறது. பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்தால் நாள் ஒன்றுக்கு 10 கோடி. மாதத்திற்கு 30 கோடி. வருடத்திற்கு 3600 கோடி என 2 வருடத்தில் 7,200 கோடி ரூபாயை ஊழல் செய்து உள்ளார் செந்தில் பாலாஜி.
ஊழல் குறித்து கேட்ட நமக்கே நெஞ்சுவலி வருகிறது. ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வராதா?, அதேபோல் தமிழகத்தில் 5,000 பார்கள் உள்ளது. இதில் 3,000 பார்கள் லைசன்ஸ் இல்லாமல் இயங்குகிறது.
கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களை, கள்ளச்சாராயம் அருந்தவில்லை விஷசாராயம் என்று தமிழக டிஜிபியே கூறுகிறார்.
சென்னை மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் ஸ்டாலின் கலைஞர் கோட்டம் திறக்க திருவாரூர் சென்று விட்டார்.
இதனால் சென்னை தலைமை செயலக கோட்டையே காலியாகி விட்டது.
சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் கலைஞர் பெயரில் ஸ்டேடியம், கலைஞர் நூலகம், இப்படி சென்றால் ஸ்டாலின் தமிழ்நாட்டின் பெயரை கூட கலைஞர் நாடு என மாற்றுவார்.
தமிழ்நாட்டு மக்கள் ஸ்டாலின் மீது கோபமாக இருக்கிறார்கள். அதனால் தான் குடியரசு தலைவர் சென்னை கிண்டி மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வரவில்லை.
அதுபோல் பீகார் முதல்வர் கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு வரவில்லை”என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் சீன அதிபர் பாரதப் பிரதமர் ஆகிய இருவரும் மாமல்லபுரத்தில் விழா நடத்தினர்.
மேலும் பாரதப் பிரதமரை வைத்து மரக்கன்று நடுவிழா, பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
அதேபோல் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி ஆகியோரை வைத்து பல திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்.
இன்றைக்கு குடியரசுத்தலைவர் முதல் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் வராமல் உள்ளதால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது இதற்கு முழு காரணம் முதலமைச்சர்தான்.
செந்தில் பாலாஜி வாயை திறந்தால் முதல்வர் வீட்டுக்கு போய் விடுவார். செந்தில் பாலாஜியை தொடர்ந்து அடுத்தடுத்து ரெய்டுகள் வரும், இதன் மூலம் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராக நிறைய பேர் வருவார்கள்.
அதிமுக – பாஜக கூட்டணியை ராஜ்நாத் சிங் சென்னை நிகழ்ச்சியில் உறுதி செய்து விட்டார்.
அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் ஒரு பைசா கூட மின்சார கட்டணம் உயர்த்தவில்லை, திமுக ஆட்சி வீட்டுக்கு போகும் வரை அதிமுகவினர் உறங்க கூடாது” என்று பேசினார் ஆர்.பி.உதயகுமார்.
இராமலிங்கம்
மேல்பாதி கோவிலை திறக்க உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்

