‘மொழிப் போர் வீரர்களுக்கு’ முதல்வர் ஸ்டாலின் வீரவணக்கம்- தாளமுத்து-நடராசன் சிலைகள் திறப்பு!

Published On:

| By Mathi

Language Struggle Martyrs

தமிழ்நாடு முழுவதும் தாய் மொழி தமிழ் காக்க உயிர் நீத்த மொழிப் போர் வீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஜனவரி 25- மொழிப்போர் வீரர்களின் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

தாளமுத்து நடராசன் சிலைகள் திறப்பு

1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் – தாளமுத்து ஆகியோருக்கு சென்னை மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று வீரவணக்கம் செலுத்தினார். அப்போது வீரவணக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் முதல்வர் ஸ்டாலின் நினைவஞ்சலி செலுத்தினார்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் ”தாளமுத்து- நடராசன்” திருவுருவச் சிலைகளையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ADVERTISEMENT

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில், முதலமைச்சர்
ஸ்டாலின் தலைமையில், ஊர்வலமாகச் சென்று சென்னை மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன், அன்னை தருமாம்பாள் நினைவிடங்களில் மரியாதைச் செலுத்தினோம்.

தமிழ்மொழி காக்க தன்னுயிர் தந்து ஆதிக்க இந்தியை விரட்டி அடித்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் சொல்லி முழக்கமிட்டோம்!

மும்மொழிக்கொள்கை என்று மீண்டும் முற்றுகையிடும் பாசிஸ்ட்டுகளுக்கும் – அவர்கள் பாதம் தாங்கும் அடிமைகளுக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம். இந்தித்திணிப்பை எந்நாளும் எதிர்ப்போம்! என பதிவிட்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share