ADVERTISEMENT

கோவையில் மின் விளக்குகளால் ஜொலிக்கும் செம்மொழி பூங்கா

Published On:

| By Pandeeswari Gurusamy

Chief Minister Stalin inaugurates semmozhi poonga

கோவை காந்திபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா திறப்பு விழா நாளை (நவம்பர் 25) நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று செம்மொழி பூங்கா முழுவதும் கண்கவரும் வகையில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

கள ஆய்வுப் பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் நவம்பர் 25, மற்றும் 26 என இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். கோவையில் கட்டப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். திறப்பை முன்னிட்டு பூங்கா முழுவதும் தற்போது கண்கவர் மின்விளக்குகள் வண்ண அலங்காரங்கள், ஓவிய விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டு பிரம்மாண்டமாக ஒளிர்கிறது.

ADVERTISEMENT

கோவையின் காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்காவில் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் பன்முக வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன .

மூலிகை தோட்டங்கள், நீரூற்றுகள், மலை குன்றுகள், உணவகங்கள், படிப்பகங்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதிகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

ADVERTISEMENT

மேலும், நடைபாதைகள், அமர்விடங்கள், பார்வையாளர்கள் ஓய்வு எடுக்க இடங்கள், பசுமை நிலப்பரப்புகள் என பிரம்மாண்டாக பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாளை திறக்கப்பட உள்ள செம்மொழி பூங்கா கோவையின் மற்றும் ஒரு அடையாளமாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில் நாளை திறப்பு விழா நடைபறும் நிலையில் இன்று பூங்கா முழுவதும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share