சாத்தனூர் அணை முன்னறிவிப்பு இன்றி திறக்கப்படவிலை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (டிசம்பர் 10) சாத்தனூர் அணையை முறையான அறிவிப்பின்றி திறந்துவிட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “சாத்தனூர் அணை 5 முறை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு பின்னர் படிபடியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் தான் சாவு 5,6 என குறைந்த அளவில் நடந்திருக்கிறது.
ஆனால் செம்பரம்பாக்கம் ஏறி முன்னறிவிப்பு இல்லாமல், அரசு திறந்துவிட்டது என இந்திய கணக்காய்வு அறிக்கையும் கூறுகிறது. இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்.
செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்டதால் தான் சென்னையே மூழ்கியது. ஏறக்குறைய 240 பேர் இறந்துபோனார்கள். இதுதான் உண்மை.
ஏன் சொல்லாமல் திறந்துவிட்டார்கள் என்றால் யாரிடம் அனுமதி வாங்குவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. இதில் வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கே தெரியும்.
எத்தனை அடி திறந்துவிட்டீர்கள் என்பது பிரச்சினை கிடையாது. சொல்லாமல் திறந்துவிட்டதுதான் பிரச்சினை. வாழைபழம் கதை மாதிரி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று பதிலளித்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி சாத்தனூர் அணை திறக்கப்படுவதாக 2.30 மணிக்கு அறிவித்து 3 மணிக்கு திறந்துவிட்டதுதான் பிரச்சினை என்று கூற தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு முழுமையாக வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
புரண்டு படுத்த தென்பெண்ணை… பொங்கி வழியும் சாத்தனூர் அணை… நள்ளிரவில் நடந்தது என்ன?
ஜாமீன் கிடைத்தும் சிறையில் கைதிகள் : நீதிமன்றம் முக்கிய உத்தரவு!