சிபிஎம்-க்கு 5 சீட் : அறிவாலயத்தில் சற்று நேரத்தில் கையெழுத்து!

Published On:

| By Kavi

சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு சற்று நேரத்தில் திமுக தலைமை அலுவலகத்துக்கு வருகிறது. அப்போது சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

2026 தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக – சிபிஎம் இடையே இழுபறி நீடித்து வந்தது.

ADVERTISEMENT

2021 தேர்தலில் சிபிஎம் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதை விட கூடுதல் தொகுதிகளை இந்த முறை கேட்டது சிபிஎம். ஆனால் திமுக இதற்கு மறுத்து, 5 தொகுதிகள் தருகிறோம் என்று பேசி வந்தது.

இதற்கு பெ.சண்முகம் ஒத்துவரவில்லை. தொடர்ந்து இன்று சென்னை, ஆழ்வார்ப்பேட்டை முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

இந்தசூழலில் தற்போது சிபிஎம் பேச்சுவார்த்தை குழு அண்ணா அறிவாலயத்துக்கு வருகிறது. அப்போது சிபிஎம்-க்கு 5 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலினும் பெ.சண்முகமும் கையெழுத்திடவுள்ளனர்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share