மனோபாலா பாராட்டியது நெஞ்சில் நிழலாடுகிறது: முதல்வர் உருக்கம்!

Published On:

| By Kavi

மறைந்த இயக்குநர் மனோபாலாவுக்கு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மனோபாலா உடல் நலக் குறைவு காரணமாக இன்று (மே 3) உயிரிழந்தார். அவருக்கு திரைபிரலங்கள் நேரிலும் சமூக வலைதள வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டிப் பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

மனோபாலாவுக்கு இளையராஜா இரங்கல்!

மரணத்தை கூட நகைச்சுவையாக பார்த்த மனோ பாலா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share