தமிழகத்தில் பாலியல் குற்றங்களை விசாரிக்க ஏழு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை இன்று ஆறாவது மற்றும் கடைசி நாளாக கூடி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.
அப்போது சில அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
பெண்கள் பாதுகாப்பு
பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி, சேலம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 7 தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
இத்தகைய குற்றங்கள் தொடர்புடைய வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்டம் தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும்.
பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிற கைதிகளுக்கு, முன் விடுதலை கிடைக்காத வகையில் தமிழ்நாடு சிறைத்துறை விதிகள் திருத்தம் செய்யப்படும்.
மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி
உள்ளாட்சி அமைப்புகளை ஒட்டி இருக்கக்கூடிய கிராமங்களும் மிக விரைவாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய காரணத்தினால் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி அமைப்புகளின் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.
புதிய மாநகராட்சிகள் நகராட்சிகள் உதயமாகின்றன. இந்த நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் பேரூராட்சிகளில் புதிய சாலைகள் அமைத்திடவும், பழுதடைந்த சாலைகளை சீரமைத்து புதுப்பித்திடவும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைகளால் சேதப்படுத்தப்பட்ட சாலைகளை சீரமைத்திடவும் வரும் ஆண்டுகளில் 3,750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கோவம் வரல… சிரிப்புதான் வந்தது… : பேரவையில் அதிமுகவினரை கிண்டலடித்த ஸ்டாலின்
கலைஞரின் ’பராசக்தி’ வசனம்… ஆளுநருக்கு எதிராக திருப்பிய ஸ்டாலின