ராணுவம் போன்ற கட்டமைப்பு – திமுக இளைஞரணிக்கு முதல்வர் பாராட்டு

Published On:

| By Pandeeswari Gurusamy

DMK MK Stalin

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தென் மண்டலத்தில் ஆளும் திமுகவின் பலத்தை நிரூபிக்கும் வகையில் விருதுநகரில் பிப்ரவரி 7ஆம் தேதி பிரம்மாண்டமான இளைஞர் அணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதற்காக ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், விருதுநகரில் நடக்க இருக்கிற தென் மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் மாநாட்டில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்காக ஒரு காணொளி ஒன்றை தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ளார். அதில், “விருதுநகர்ல நடக்குற தென்மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிற இளைஞர்களுக்காகத்தான் இந்த வீடியோ. 1980ல் நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது தொடங்கப்பட்ட அணி இளைஞர் அணி. 1949ல் இளைஞர்களால தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்தப் பேரியக்கத்தோட அடுத்த தலைமுறையாக மீண்டும் இளைஞர்கள்கிட்ட நம்ம திராவிட முன்னேற்றக் கழகத்தை கொண்டு சேர்க்க இந்த அணியை தொடங்கினோம்.

ADVERTISEMENT

அன்றைக்கு என்கூட களத்தில் நின்னு கழகத்தை வளர்த்த இளைஞர்கள் தான் இன்னைக்கு உங்கள் முன் அமைச்சர்களாக, எம்எல்ஏக்களாக, எம்பிக்களாக, மாவட்ட கழக செயலாளர்களாக, பல்வேறு பொறுப்புக்களில் இருக்கிறார்கள்.

எங்களுக்கு அடுத்தபடியா, இப்போ இந்த இயக்கத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கிற பணியை அந்தக் கடமையை தம்பி உதயநிதி அவர்கள் சிறப்பாக செஞ்சு கொண்டு இருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மேல எப்போதும் வன்மத்தோட இருக்கிற எதிரிகள் என்ன கட்டம் வச்சாங்க? இளைஞர்கள் இனி திமுகவுக்கு வருவாங்களான்னு சந்தேகத்தை எழுப்புற மாதிரி தங்களோட ஆசைகளை வெளிப்படுத்திக்கிட்டு இருந்தாங்க. அதையெல்லாம் உடைச்சு உதயநிதி இளைஞர் அணிக்கு இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க 5,00,000 நிர்வாகிகள் நியமிச்சு ரெகார்ட் பண்ணி இருக்காரு. இது போதாதுன்னு மண்டல அளவுல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நடத்தணும்னு சொல்லி மாநாடுகளை நடத்துகிறார்.

ADVERTISEMENT

ஏற்கனவே திருவண்ணாமலைல ஒன்றரை லட்சம் நிர்வாகிகளை கூட்டி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை நடத்திட்டார். ரொம்ப பர்ஃபெக்டா நடந்த அந்த மாநாட்டைப் பார்த்து எதிர்க் கட்சியில் இருக்கிற பலருக்கும் தூக்கம் போயிடுச்சு. ஐந்து லட்சம் நிர்வாகிகள் ஒரு கட்சியினுடைய துணை அமைப்பில் நியமிச்சு வேலை செய்றதை பார்த்து மத்த கட்சிகள் எல்லாம் ஃபாலோ பண்ற ப்ளூ பிரிண்ட்டை திமுக இளைஞர் அணி தான் கொடுக்கப்போகுதுன்னு நினைக்கிறேன்.

இளைஞர் அணியின் ஒன்றிய, நகர, பேரூராட்சி அமைப்பாளர்களாக இருக்கக்கூடிய 12,000க்கு அதிகமான நிர்வாகிகளுடன் சேர்த்து கிளை, வார்டு, பாகம் அளவிலும் 5,00,000நிர்வாகிகளை நியமிக்கணும்னு இளைஞர் அணி செயலாளர் உதயநிதி மிஷன் மோடில் வேலை செஞ்சிருக்காரு. இதை அவர் செஞ்சு காட்டி இருக்கக்கூடிய ப்ராசஸ் மலைப்பை ஏற்படுத்துறது. தமிழ்நாடு முழுக்க விருப்ப மனுக்கள் பெற்று அந்தத் தகவல்களை டிஜிட்டலைஸ் பண்ணி அவங்களையெல்லாம் அன்பகத்துக்கே நேரில் அழைச்சு வெரிஃபை பண்ணி இருக்காங்க. முப்பத்தி ஐந்து வயசுக்கும் குறைவா இருக்கிறவங்களைப் போட்டு அந்தப் பட்டியலை முரசொலியில் முறையா தொடர்ந்து வெளியிட்டாங்க. எழுபத்தி எட்டு கழக மாவட்டங்களிலும், சோசியல் மீடியாவுக்கு என்று தனியா துணை அமைப்பாளர்களையும் நியமிச்சு இருக்காங்க.

இதோட தொடர்ச்சியாத்தான் மண்டல வாரியா இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுது. 5,00,000 பேருக்கும் போட்டோ ஐடி கார்டுன்னு ஒரு ராணுவப்படையை போன்ற உறுதியான கட்டமைப்பு, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கோட இது நடக்குது. அதனாலதான் பிப்ரவரி ஏழாம் நாள் விருதுநகரில் கூட்டம் சொன்னதும் எனக்குள் புது உற்சாகம் உண்டாச்சு.

இந்த விருதுநகர் மாநாட்டில் எதுக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து இயங்கணும், இளைஞர்களான நீங்க எப்படி கொள்கையோடு செயல்படணும், எதுக்காகத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் தமிழ்நாட்டில் தொடரணும் என்பது பற்றியெல்லாம் இளைஞர்களான உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கப்போறேன். பிப்ரவரி ஏழு, விருதுநகர்ல சந்திப்போம். வெல்வோம்! ஒன்றாக.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share