‘நீட்’டால் எம்பிபிஎஸ் படிக்க முடியவில்லை’: மாணவனுக்கு உறுதியளித்த முதல்வர்!

Published On:

| By Jegadeesh

Stalin has said that student Rahul Kanth

மாணவர் ராகுல் காந்த்தின் கல்வி மீதான ஆர்வமும் அவரது உழைப்பும் போற்றத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலின் பொதுப்பிரிவில், மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ராகுல் காந்த். இவர் அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

ADVERTISEMENT

இவர் இன்று (ஜூலை 27) சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு  பேட்டியளித்தார். அதில், தான் பத்தாம் வகுப்பு தேர்வில் 495 மதிப்பெண் எடுத்திருந்ததாகவும் அறிவியலில் ஈடுபாடு உள்ளதால் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியல் பாடத்தை தேர்ந்தெடுத்ததாகவும், அதில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 582 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். அதில் கணிதம், இயற்பியல், உயிரியல் பாடப்பிரிவுகளில் முழு மதிப்பெண்கள் எடுத்தேன்.

அப்பா என்னை கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைத்தார். தற்போது உள்ள குடும்ப சூழ்நிலையில் என்னால் நீட் தேர்விற்கு பயிற்சி பெற முடியாது. அதேநேரம் எனக்கு உயர்கல்வி படிப்பதற்கு ஆசை இருக்கிறது. அரசு முன்வந்து எனக்கு உதவி செய்ய வேண்டும் “ என்று கோரிக்கை வைத்தார்.

ADVERTISEMENT

மேலும், ”அப்படி நடந்தால் நிச்சயமாக நான் கால்நாடை மருத்துவராகி கிரமப்புரங்களில் இருக்கக் கூடிய கால்நடைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிப்பேன் “ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், படிப்பு மட்டுமே நம்முடைய சொத்து. நிலையான புகழ். உங்களுக்கு உதவ அரசு இருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை 27) வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், “மாணவர் ராகுல் காந்த் அவர்களின் கல்வி மீதான ஆர்வமும் அவரது உழைப்பும் போற்றத்தக்கது; அவரை நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!

கல்வியின் முக்கியத்துவத்தை நான் ஒவ்வொரு முறை வலியுறுத்திப் பேசுவதும், நம்முடைய ’நீட்’ எதிர்ப்பு என்பதும் ராகுல் காந்த் போன்ற மாணவர்களின் வெற்றிக்காகத்தான்! அவருக்கு உதவ நமது அரசு இருக்கிறது. படிப்பு மட்டுமே நம்முடைய சொத்து! நிலையான புகழ்!
தடைகளைக் கடந்து படிப்போம்! படிப்பால் பெருமையடைவோம்! ராகுல் காந்த்தின் பெற்றோருக்குப் பாராட்டுகள்!” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தனுஷின் கேப்டன் மில்லர் : புதிய போஸ்டர் வெளியீடு!

“ED இயக்குநர்” – இனி பணி நீட்டிப்பு கேட்டு வரக்கூடாது: உச்ச நீதிமன்றம்!

திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்: பாதியில் வெளியேறிய மேயர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share