“முதல்வர் விரைவில் நலம்பெற வேண்டும்”: அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி

Published On:

| By Kavi

Chief Minister get well soon Edappadi

முதல்வர் ஸ்டாலின் தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். Chief Minister get well soon Edappadi

தமிழக முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல் இன்று (ஜூலை 21) காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் நலமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனைக்கு சென்று வந்த மூத்த அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.

இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் நலம்பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

ADVERTISEMENT

மன்னார்க்குடியில் பிரச்சாரத்தின் போது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “முதல்வருக்கு திடீரென உடல்நிலை சரியில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என தகவல் வந்தது. அவர் பூரண குணமடைய வேண்டும் என்று என் சார்பாகவும், உங்கள் சார்பாகவும் வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் முதல்வரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார்.

ADVERTISEMENT

நடிகரும் மநீம கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

“தமிழக முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் தலை சுற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன் அவர் பூரண உடல்நலம் பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று முன்னாள் ஆளுநரும் பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“உடல்நலத்தைப் பற்றி பொருட்படுத்தாமல், ஓய்வில்லாமல் உழைக்கும் முதல்வர் தனது உடல்நலத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டுமென விரும்புகிறேன். மருத்துவமனையில் இருக்கும் அவர் பூரண நலம் பெற விழைகிறேன்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். Chief Minister get well soon Edappadi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share