130 மருத்துவ உதவியாளர்களுக்கு பணியாணை: ரூ. 202 கோடியில் உயர்கல்வி கட்டிடங்கள் திறப்பு!

Published On:

| By Kalai

Chief Minister gave employment to 130 people

ரூ. 202 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ உதவி அலுவலர்களுக்கு இன்று(ஜனவரி 20)பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 130 சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

அதற்கு அடையாளமாக 5 சித்தா உதவி மருத்துவர்கள், 5 ஆயுர்வேத உதவி மருத்துவர்கள், 5 ஓமியோபதி உதவி மருத்துவர்கள் என,

15 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

ADVERTISEMENT

இதேபோன்று உயர்கல்வி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ரூ.202.7 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வகுப்பறைக் கட்டடங்கள்,

ADVERTISEMENT

ஆய்வகங்கள், கருத்தரங்கு கூடம், விடுதிகள், மின்னணு நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கலை.ரா

பச்சை பொய் அண்ணாமலை: செந்தில்பாலாஜி

கடலூரில் பாஜக செயற்குழு: காரணம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share