ADVERTISEMENT

தொடரட்டும் தொண்டறம்.. மூப்பினை வென்ற மூவாப் போராளி – ஆசிரியர் கி.வீரமணிக்கு முதல்வர் வாழ்த்து

Published On:

| By Pandeeswari Gurusamy

Chief Minister congratulates K. Veeramani

திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இன்று தனது 93 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். பொன்னாடை போர்த்தி புத்தகங்களை பரிசளித்தார்.

முதலமைச்சருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோரும் ஆசிரியர் கி.வீரமணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், தொடரட்டும் ஆசிரியர் அய்யாவின் தொண்டறம்!

தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி ஆசிரியர் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

ADVERTISEMENT

பெரியார் திடலும் – அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன.

பெரியாரியத் தடியும், பேரறிஞரின் மதியும், முத்தமிழறிஞரிடம் கற்ற உழைப்பும் கொண்டு Dravidian Model நல்லாட்சி நிலைக்கச் செய்வோம், ஆசிரியர் அய்யாவின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்!” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share