நீதித்துறையில் அதிக பெண்கள் : பிரிவு உபச்சார விழாவில் தமிழகத்தை பாராட்டிய தலைமை நீதிபதி!

Published On:

| By Kavi

நீதித்துறையில் ஏராளமான பெண் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்துக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம் பாராட்டு தெரிவித்துள்ளார். Chief Justice praises Tamil Nadu

கடந்த 9 மாதங்களாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் கே.ஆர்.ஸ்ரீராம் இன்னும் இரண்டரை மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ளார். 

ADVERTISEMENT

இந்த நிலையில் அவரை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாறுதல் செய்து குடியரசு தலைவர் கடந்த ஜூலை 14ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். 

இந்த நிலையில் இன்று (ஜூலை 18) சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. 

ADVERTISEMENT

இவ்விழாவில் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து இதுவரை ஐந்து நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர் என்று கூறினார். 

அவரைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், புகழ்மிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்தது பெருமையாக உள்ளது. இந்த ஒன்பது மாத பதவி காலத்தில் அதிக அளவில் கற்றுக் கொண்டுள்ளேன். முழு திருப்தியுடன் விடைபெறுகிறேன். 

ADVERTISEMENT

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் ஆஜராகிறார்கள். அதுபோன்று ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் பதிவு செய்கின்றனர். தமிழக நீதித்துறையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 213 நீதிபதிகளில் 13 பேர் பெண்கள். இதற்காக நான் தமிழ்நாட்டை பாராட்டுகிறேன் என்றார்.

கடைசியாக, ‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற திருக்குறளையும் குறிப்பிட்டார்.  Chief Justice praises Tamil Nadu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share