கிச்சன் கீர்த்தனா : செட்டிநாடு முட்டைக் குழம்பு

Published On:

| By Minnambalam

செட்டிநாடு உணவு வகைகளுக்கு உலக அளவில் அறிமுகம் தேவையில்லை. இது உலகெங்கிலும் உள்ள பல உணவுப் பிரியர்களை அதன் செழுமையான, காரமான மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் கவர்ந்துள்ளது.

தூக்கலான நாட்டுக்கோழி குழம்பு (நாட்டு கோழி), ஆட்டுக்கறிக் குழம்பு (இளம் ஆடு), காரைக்குடி இறால் மசாலா மற்றும் பிற செட்டிநாடு உணவுகள் உங்களில் நாவை சுண்டி ஈர்க்கும். அந்த வகையில் செட்டிநாடு முட்டைக் குழம்பும் ஒன்று.

ADVERTISEMENT

என்ன தேவை?

சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சைமிளகாய் – 2
தக்காளி – 2
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள் ) – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
முட்டை – 4
சோம்பு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சோம்பு, சீரகம் சேர்த்துத் தாளித்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் மல்லித்தூள்(தனியாத்தூள்),  மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.

ADVERTISEMENT

பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். குழிவான கரண்டி ஒன்றை எடுத்து, இதன் உட்புறம் சிறிது எண்ணெய் ஊற்றி, தீயில் காண்பித்து எண்ணெய் சூடானதும் முட்டையை உடைத்து கரண்டியில் ஊற்றி, இதை கொதித்துகொண்டிருக்கும் குழம்பில் ஊற்றவும். மூடி போட்டு  ஐந்து நிமிடம் குழம்பை வேக விடவும். இதில் காரத்துக்கு ஏற்ப மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

கீழக்கரை மீன் குழம்பு

கிச்சன் கீர்த்தனா  : ஷாஹி முட்டை கறி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share