கிச்சன் கீர்த்தனா  : செட்டிநாடு மட்டன் சுக்கா

Published On:

| By Minnambalam

பெரும்பாலான வீடுகளில் வீக் எண்ட் உணவுகளில் அசைவ உணவுகளும் இடம்பெற்று விடுகின்றன.

பாரம்பர்ய நான்-வெஜ் ஹோட்டல்களுக்கு இணையான சுவையை வீட்டு உணவிலும் அளிக்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் இந்த செட்டிநாடு மட்டன் சுக்கா செய்து இந்த நாளைச் சிறப்பாக்கலாம்.

ADVERTISEMENT

என்ன தேவை?

மட்டன் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 150 கிராம்
பூண்டு – 10 பல்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கரம் மசாலாத்தூள் – 2 சிட்டிகை
காய்ந்த மிளகாய் – 4
இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப    

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?

மட்டனைச் சிறிய பீஸ்களாக நறுக்கி நன்கு அலசி குக்கரில் போட்டு மஞ்சள்தூள், இஞ்சி – பூண்டு விழுது, சிறிதளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு, நன்கு வேகவைத்து எடுத்து வைக்கவும்.

ADVERTISEMENT

சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பூண்டை வட்டமாக சிறிய ஸ்லைஸ்களாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கறிவேப்பிலை, கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளித்து… வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து, வேகவைத்த மட்டனையும், மட்டன் வெந்த தண்ணீரையும் சேர்க்கவும். இதில் கரம் மசாலாத்தூள் போட்டு, மட்டனில் உள்ள தண்ணீர் வற்றும் வரை நன்கு சுருள வதக்கி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவினால்… செட்டிநாடு மட்டன் சுக்கா ரெடி!

இறால் துவையல்

கிச்சன் கீர்த்தனா : மொஹல் மட்டன் கிரேவி

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share