செஸ் ஒலிம்பியாட்: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

Published On:

| By Minnambalam

சென்னை , மாமல்லபுரத்தில் 44 வது செஸ் போட்டி ஜூலை 29 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

போர்க்களத்தில் பூத்த பூ என்றும் , கியூட் பேபி என்றும் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலான பாலஸ்தீனத்தை சேர்ந்த குட்டி குழந்தை ராண்டா செடர்.
பாலஸ்தீனத்தில் கேட்கும் குண்டு சத்ததிற்கு இடையே இவர் அமைதியாக செஸ் விளையாடி வருகிறார். குட்டி குழந்தைகளுக்கான அதே கியூட்னெஸ் உடன் இருக்கும் இவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று ( ஜூலை 31 ) மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் போட்டிகளை செஸ் அரங்கிற்கு கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் உடன் சென்று நேரடியாக பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ராண்டா செடரிடம் செஸ் போட்டிகளுக்கு தமிழக அரசு செய்திருக்கும் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அவர் வெள்ளை வேட்டி சட்டையுடன் ஆய்வுகளை மேற்கொள்ள செல்வது தான் வழக்கம். ஆனால் இந்த ஆய்வில் கேசுவல் சர்ட் மற்றும் பேண்ட் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்குடமிம், உணவு ஏற்பாடுகள் எல்லாம் திருப்தியாக இருக்கிறதா, அல்லது வேறு ஏதேனும் தேவைகள் இருக்கிறதா என்றெல்லாம் வெளிநாட்டு செஸ் வீரர்களிடம் ஸ்டாலின் கேட்க, அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT
Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share