44 -வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று ( ஜூலை 28 ) உலகமே வியக்கும் வண்ணம் கோலாகலமாக தொடங்கியது.
இந்த 44 -வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணியின் சார்பில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம் :
இந்திய அணி ” A ” பிரிவில் ,
பென்டலா ஹரிகிருஷ்ணா , விதித் குஜ்ராதி , அர்ஜுன் எரிகசி , எஸ்.எஸ். நாரயணன், கிருஷ்ணன் சசிகிரன், ஆகியோர் விளையாட உள்ளனர்.
அவர்களை பற்றி பார்ப்போம்;
பென்டலா ஹரிகிருஷ்ணா ( 2720 ) GRAND MASTER

2020 ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற அணியில் விளையாடியுள்ளார்.
காமென்வெல்த் சாம்பியன் 2002
உலக ஜூனியர் சாம்பியன் 2024
2700 ELO ரேட்டிங்கை கடந்த மூன்றாவது வீரர்.
ஆசிய தனி சாம்பியன் 2011
விதித் குஜ்ராதி ( 2714 ) GRAND MASTER

இந்தியாவின் நம்பர் 2 வீரர்
2700 ELO ரேட்டிங்கை கடந்த நான்காவது இந்திய வீரர்
ஓப்பன் அண்டர் 14 உலக யூத் சாம்பியன்
2020 ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற அணியின் கேப்டன்
அர்ஜுன் எரிகசி ( 2689 ) GRAND MASTER

தெலுங்கானா மாநிலத்தின் முதல் கிராண்ட் மாஸ்டர்
டாடா ஸ்டீல் செஸ் சேலஞ்சர்ஸ் வின்னர்.
ஆசிய யூத் சாம்பியன்ஷிப் 2015 சில்வர்
எஸ்.எஸ். நாரயணன் ( 2659 ) GRAND MASTER

தேசிய ஜூனியர் செஸ் 2014 தங்கம்
Granfiscacchi Catholica சர்வதேச செஸ் ஒப்பன் 2022 முதல் பரிசு
ஆசிய ஜூனியர் பிளிட்ஸ் செஸ் 2016 தங்கம்
கிருஷ்ணன் சசிகிரன் ( 2638 ) GRAND MASTER

2014 செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்ற அணியில் விளையாடியவர்.
2011 ஆசிய ப்ளிட்ஸ் செஸ் சாம்பியன்
2700 ELO ரேட்டிங்கை கடந்த இரண்டாவது இந்திய வீரர்.
அர்ஜூனா விருது வென்றவர்
இந்திய அணி ” B “பிரிவில் ,
பிரக்ஞானந்தா , அதிபன் பாஸ்கரன் , ரெளநக் சத்வானி , குகேஷ் , நிஹல் சரின் ஆகியோர் விளையாட உள்ளனர்.
பிரக்ஞானந்தா ( 2648 ) GRAND MASTER

16 வயதில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வென்றவர்
2020 செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற அணியில் விளையாடியவர்
அண்டர் 8 , அண்டர் 10 உலக யூத் சாம்பியன்
10 வயதில் இண்டர்நேசனல் சாம்பியன்
அதிபன் பாஸ்கரன் ( 2598 ) GRAND MASTER

2008 உலக அண்டர் 16 சாம்பியன்
ரேய்ஜக் ஓப்பன் 2018 வின்னர்
2009 தேசிய சாம்பியன் 2007 ஆசிய அண்டர் 16 சாம்பியன்
ரெளநக் சத்வானி ( 2611 ) GRAND MASTER

13 வயதில் கிராண்ட் மாஸ்டர்
அண்டர் 10 காமன்வெல்த் கோல்டு சாம்பியன்
நிறைய ஆன்லைன் ப்ளிட்ஸ் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்
குகேஷ் ( 2684 ) GRAND MASTER

12 வயதில் கிராண்ட் மாஸ்டர்
உலக யூத் அண்டர் 12 சாம்பியன்
சிறு வயதிலேயே உலக டாப் 100 -ல் வந்த இந்திய வீரர்
தேசிய அண்டர் 11 சாம்பியன்
நிஹல் சரின் ( 2651 ) GRAND MASTER

14 வயதில் கிராண்ட் மாஸ்டர்
2020 செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற அணியில் விளையாடியவர்
2014 உலக அண்டர் 10 சாம்பியன்
தேசிய அண்டர் 19 சாம்பியன்
மு.வா.ஜெகதீஸ் குமார்-
