செஸ் ஒலிம்பியாட்: சோனியா , ராகுலுக்கு அழைப்பு விடுத்த திமுக எம்.பி.க்கள்!

Published On:

| By Jegadeesh

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரம் விழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், அந்தப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இப்போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் மற்றும் போட்டிக்கான அதிகாரிகள், செஸ் சம்மேளன நிர்வாகிகள் தங்குவதற்கு நட்சத்திர விடுதிகளில் போதுமான அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

போட்டிகள்  நடக்கும் அரங்குகளில் மொத்தம் 707 டிஜிட்டல் செஸ் போர்டுகள் , மேஜைகள் தயார் நிலையில் உள்ளது.

ADVERTISEMENT

செஸ் ஒலிம்பியாட்டுக்கு முன்பாக, போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் செஸ் போர்டுகள், அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள் எல்லாம் துல்லியமாக செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

அதன்படி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கில் நேற்று ( ஜூலை 24 )  பயிற்சி போட்டி நடைபெற்றது.

ADVERTISEMENT

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள நிலையில்,

அதற்கான அழைப்பிதழை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் , மத்திய அமைச்சர்களுக்கும் நேரில் சென்று வழங்கினர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் இன்று ( ஜூலை 25 ) தி.மு.க நாடாளுமன்ற மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் , பி.வில்சன் ஆகியோர் நேரில் சென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்-

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share