செஸ் இறுதிப் போட்டி: வரலாறு படைப்பாரா பிரக்ஞானந்தா?

Published On:

| By Jegadeesh

செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நேற்று (ஆகஸ்ட் 23) நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ட்ராவில் முடிவடைந்த சூழலில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைப்பாரா தமிழக வீரர் பிரக்ஞானந்தா  என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

அஜர்பைஜான் நாட்டில் உலகக்கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயது வீரர்  பிரக்ஞானந்தா காலிறுதியில் அர்ஜூனை வீழ்த்தி, உலகின் மூன்றாம் நிலை செஸ் வீரரான ஃபாபியனோ கருனாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அதேபோல் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனும்  இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இவர்கள் இருவருக்கும் இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு பிறகு  செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற வரலாற்று  பெருமையையும், உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மிகக்குறைந்த வயதுடையவர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றார்.

இதனையடுத்து அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின், சச்சின், விஸ்வநாதன் ஆனந்த உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பிரக்ஞானந்தா – கார்ல்சன் இடையிலான முதல் சுற்று இறுதிப்போட்டி நேற்று (ஆகஸ்ட் 22) ஆம் தேதி தொடங்கியது.

Image

இதில் தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா நிதானமாக ஆடினார். பிரக்ஞானந்தா தனது 18-வது நகர்வில் கார்ல்சனின் ராணியை தூக்க, அடுத்த நகர்விலேயே பிரக்ஞானந்தாவின் ராணியை கார்ல்சன் தூக்கினார்.

Image

கறுப்பு காய்களுடன் ஆடிய கார்ல்சன் முதல் சுற்றில் ட்ரா செய்யக் கூடாது என்ற முனைப்புடன் ஆடினார். ஆனால் எந்த சூழலிலும் பொறுமையை இழக்காத பிரக்ஞானந்தா ஆட்டத்தை ட்ராவில் முடித்தார்.

முதல் சுற்று ஆட்டம் ட்ராவில் முடிவடைந்ததால், இன்று நடக்கவுள்ள இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்துள்ள சூழலில் வரலாற்று சாதனை படைப்பாரா பிரக்ஞானந்தா என்று இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சீண்டி பார்த்தால் பழைய திமுகவை பார்ப்பீர்கள்: ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: தினை – பச்சைப்பயறு ஊத்தப்பம்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share