தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் இன்று (பிப்ரவரி 26) காலை காலணி வீசிய நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. cheppal thrown at Vijay’s house!
விழுப்புரத்தில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டைத் தொடர்ந்து, இன்று அக்கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்ரவரி 26) கோலாகலமாக நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரான விஜய் பங்கேற்க உள்ளதை அடுத்து இன்று காலை முதலே ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் அங்கு படையெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே விஜய் பனையூரில் உள்ள தனது வீட்டில் இருந்து விழா நடைபெறும் இடத்திற்கு புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் விஜய் வீட்டிற்குள் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், குழந்தையின் செருப்பை தனது காதில் வைத்து செல்ஃபோனில் பேசுவது போல சைகை காட்டிவிட்டு தீடீரென விஜயின் வீட்டிற்குள் அதனை வீசினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
எனினும் உடனடியாக அவரை அங்கிருந்து வெளியேற்றிய காவலாளிகள், அங்கிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ததில், அவர் கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த மணி என்பதும், போதையில் காலணியை வீசியதும் தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே விஜய் மீது முட்டை வீசுவதாக ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்தக் காலணி வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.