ADVERTISEMENT

CSKvsDC : சென்னையில் நாளை எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்??

Published On:

| By christopher

சேப்பாக்கத்தில் நாளை (மே 10) நடைபெறும் சென்னை – டெல்லி இடையிலான போட்டியைத் தொடர்ந்து போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பை சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஐபிஎல் தொடரில் தான் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது.

ADVERTISEMENT

அதன்படி நடப்பு சீசனில் 7 லீக் மற்றும் 2 பிளே ஆஃப் என மொத்தம் 9 போட்டிகள் சேப்பாக்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் உட்பட 5 லீக் போட்டிகள் முடிவடைந்துவிட்டன.

ADVERTISEMENT

இந்நிலையில் போட்டி நடைபெறும் நாட்களில் சேப்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தொடந்து புகார்கள் எழுந்தன.

இதனை கருத்தில் கொண்டு போட்டி நடைபெறும் நாட்களில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் குறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
chepauk travel route changed due to csk match

அதில், “ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (10-ந்தேதி), 14, 23, 24 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இப்போட்டி நடைபெறும் நாட்களில் போக்குவரத்தினை கட்டுப்படுத்த, போட்டி முடிவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து வாகனங்களும் வாலாஜா பாயின்ட் வழியாக கொடி மரச் சாலை வழியாக அவர்களது இலக்கை அடையலாம்.

*காந்தி சிலையில் இருந்து உழைப்பாளர் சிலை நோக்கி உள்வரும் வாகனங்கள் அனைத்தும் காந்தி சிலை அருகே திருப்பி விடப்பட்டு ஆர்.கே.சாலை வழியாக சென்று அவர்களது இலக்கை அடையலாம்.

* தொழிலாளர் சிலையில், வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. மாறாக கண்ணகி சிலையை நோக்கி திருப்பி விடப்படும்.

* அண்ணா சிலை அருகே, வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது, வெலிங்டன் பாயின்ட் மற்றும் பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும்.

 * பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில், வாகனங்கள் பெல்ஸ் சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது மற்றும் கண்ணகி சிலை (அல்லது) ரத்னா கபே சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும்.

 * பேட்டா பாயிண்டில், வெளிச்செல்லும் வாகனங்கள் “யு” திருப்பம் செய்ய அனுமதியில்லை. அதற்கு பதிலாக, வாகனங்கள் வெலிங்டன் பாயிண்ட் வரை செல்ல அனுமதிக்கப்படும், அங்கிருந்து வாகனங்கள் வலதுபுறம் டேம்ஸ் ரோடு சாலையை நோக்கி ஸ்பென்சர்ஸ் சந்திப்பு நோக்கி நேராக செல்லலாம்.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம் – உதயநிதி எதிர்ப்பு, துரைமுருகன் கோபம், குழப்பத்தில் ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி: முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பிய இயக்குநர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share