ADVERTISEMENT

INDvsAUS உலகக்கோப்பை போட்டி… சேப்பாக்கில் போக்குவரத்து மாற்றம்!

Published On:

| By christopher

சென்னை சேப்பாக்கம் எம்‌.ஏ. சிதம்பரம்‌ கிரிக்கெட்‌ மைதானத்தில்‌ நாளை (அக்டோபர் 8) இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை போட்டி நடைபெறுவதை முன்னிட்டு கீழ்க்கண்ட சாலைகளில்‌ மதியம்‌ 12.00 மணி முதல்‌ 22.00 மணி வரை கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள்‌ செய்யப்பட்டுள்ளன.

விக்டோரியா ஹாஸ்டல்‌ ரோடு (கெனால்‌ ரோடு):

ADVERTISEMENT

இந்த சாலைக்கு பாரதி சாலையில்‌ இருந்து வாகனங்கள்‌ செல்லலாம்‌. வாலாஜா சாலையில்‌ இருந்து வாகனங்கள்‌ செல்ல அனுமதி இல்லை.

பெல்ஸ்‌ சாலை

ADVERTISEMENT

1. இந்த சாலை தற்காலிக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு பாரதிசாலை – பெல்ஸ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள்‌ செல்லலாம்‌. வாலாஜா சாலை – பெல்ஸ்சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ்சாலைக்கு வாகனங்கள்‌ செல்ல அனுமதி இல்லை.

2. கண்ணகி சிலையில்‌ இருந்து வரும்‌ MTC பேருந்துகள்‌ பெல்ஸ்‌ சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள்‌ இலக்கை அடையலாம்‌.

ADVERTISEMENT

பாரதி சாலை

1. ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும்‌ வாகனங்கள்‌ பாரதிசாலை – பெல்ஸ்சாலை சந்திப்பில்‌ திருப்பப்பட்டு பெல்ஸ்‌ சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள்‌ இலக்கை சென்றடையலாம்‌.

2. பாரதிசாலை * பெல்ஸ்‌ சாலை சந்திப்பில்‌ இருந்து நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.

வாலாஜா சாலை

1. அண்ணாசாலையில்‌ இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜாசாலை வரும்‌ M,T,V ஆகிய எழுத்துக்கள்‌ கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள்‌ உள்ள வாகனங்கள்‌ வாலாஜா சாலை, உழைப்பாளர்‌ சிலை, காமராஜர்‌ சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள்‌ வாகன நிறுத்தத்தை அடையலாம்‌.

2. வாலாஜா சாலை – பெல்ஸ்‌ சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ்‌ சாலைக்கு வாகனங்கள்‌ செல்ல அனுமதி இல்லை.

3. அண்ணாசாலையில்‌ இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜா சாலை வரும்‌ B & R ஆகிய எழுத்துக்கள்‌ கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள்‌ உள்ள வாகனங்கள்‌ வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்‌.

காமராஜர்‌ சாலை

போர்‌ நினைவு சின்னம்‌ மற்றும்‌ காந்தி சிலை வழியாக வரும்‌ வாகனங்கள்‌ M,T,V ஆகிய எழுத்துக்கள்‌ கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள்‌ உள்ள வாகனங்கள்‌ பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று அந்தந்த
வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்‌.

போர்‌ நினைவு சின்னம்‌ மற்றும்‌ காந்தி சிலை வழியாக வரும்‌ வாகனங்கள்‌ B & R  ஆகிய எழுத்துக்கள்‌ கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள்‌ உள்ள வாகனங்கள்‌ காமராஜர்‌ சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை, பெல்ஸ்‌ சாலை
மற்றும்‌ வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்‌. உழைப்பாளர்‌ சிலையிலிருந்து வாகனங்கள்‌ வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை.

அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள்‌:

1. அண்ணாசாலையில்‌ இருந்து அண்ணாசிலை  வழியாக வாலாஜா சாலை வரும்‌ வாகனங்கள்‌  உழைப்பாளர்‌ சிலை காமராஜர்‌ சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில்‌ உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்‌.

2 போர்‌ நினைவு சின்னம்‌ வழியாக வரும்‌ வானங்கள்‌, காமராஜர்‌ சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில்‌ உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்‌.

3 காந்தி சிலையில்‌ இருந்து வரும்‌ வாகனங்கள்‌ காமராஜர்‌ சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில்‌ நிறுத்தங்களுக்கு செல்லலாம்‌.

மேற்கண்ட மாற்றங்கள் நாளை மட்டுமின்றி போட்டி நடைபெறும் 13.10.2023, 18.10.2023, 23.10.2023 மற்றும்‌ 27.10.2023 ஆகிய நாட்களிலும் மதியம்‌ 12.00மணி முதல்‌ 22.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

எனவே இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள்‌ ஒத்துழைக்குமாறு சென்னை போக்குவரத்துத்துறை சார்பில் கேட்டுக்‌ கொள்ளப்பட்டது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விமர்சனம்: ரத்தம்!

காவிரி தண்ணீர்… தனித்தீர்மானம் நிறைவேற்ற முடிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share