நடிகர் யோகிபாபு சொல்றதை கேளுங்க… உங்க பணம் பாதுகாப்பாக இருக்கும்!

Published On:

| By Kumaresan M

சமீபகாலமாக முதியோர் உட்பட சிலருக்கு வரும் அழைப்பில், மும்பையில் இருந்து பேசுவதாக கூறுபவர்கள்,   உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்துள்ள பொருட்களில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட  போதைப்பொருட்கள் போன்றவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அழைப்பை துண்டிக்கக்கூடாது, நாங்கள் கூறும் விஷயங்களை கேட்டு, ரிசர்வ் வங்கியில்  நாங்கள் அனுப்பும் வங்கிக்கணக்குக்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்.

மேலும், வீடியோ காலில் காவல் துறை அதிகாரி விசாரணைக்கு அமர்ந்து பேசுவதை போலவே மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை நம்ப வைக்கின்றனர். இப்படி அப்பாவிகளை மிரட்டி தற்போது வரை ரூ.10 கோடிக்கும் அதிகமாக பணத்தை பறித்துள்ளனர்.  இவற்றை காவல்துறையினர் மீட்டும் கொடுத்துள்ளனர்.

இந்த விஷயம் குறித்து மக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டது. மக்களிடத்தில் பிரபலமான ஒருவர் பேசினால் நன்றாக இருக்கும் என கருதி நடிகர் யோகி பாபுவின் மூலம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், நடிகர் யோகிபாபு நடக்கும் மோசடிகளை தெரிவித்து, மோசடியில் மக்கள் ஏமாந்துவிட வேண்டாம். அப்படி ஏதாவது  அழைப்பு வந்தால் உடனடியாக 1903 என்ற காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணுக்கு புகார் அளிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார். பணத்தை இழந்தவர்கள் 24 மணிநேரத்திற்குள் புகார் பதிவு செய்தால் பணத்தை மீட்க  துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 சடாரென்று பிரேக் போட்ட தங்கம் விலை! இன்று சவரன் எவ்ளோ?

ஹரியானா : மாறும் காட்சிகள்… வேகமாக முன்னேறும் பாஜக… சோகத்தில் காங்கிரஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share