ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் நேற்று (ஏப்ரல் 22) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. chennai women share terrorst attack
இந்த தாக்குதலில் இருந்து தப்பித்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஏப்ரல் 19-ஆம் தேதி சென்னையில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்றோம். பின்னர் அங்கிருந்து சோன்மார், தூத்பத்ரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றோம். நேற்று பகல்ஹாமுக்கு சென்றிருந்தோம். குதிரை சவாரி செய்து அங்குள்ள 8 இடங்களை சுற்றிப் பார்த்தோம்.
பின்னர் வைஸ்ரண்ட் வேலிக்கு சென்றோம். இன்னும் ஐந்து நிமிடத்தில் மினி சுட்சர்லாந்து போல தோற்றமளிக்கும் வைஸ்ரண்ட் வேலிக்கு நாம் செல்லப்போகிறோம் என்று குதிரை ஓட்டி சொன்னார்.
அப்போது எங்களை நோக்கி ஓடிவந்த சிலர், ‘கோ பேக்… கோ பேக்… தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள்’ என்று எச்சரித்தனர்.
இதனால் நாங்கள் அச்சமடைந்தோம். ஐந்து புல்லட் சத்தங்கள் கேட்டது. குதிரை ஓட்டி தான் எங்களை அவசர அவசரமாக அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். அங்கிருந்து தப்பித்தது மிகவும் மிராக்கலாக இருந்தது. சாவின் விளிம்பில் இருந்து தப்பி வந்ததை போன்று உணர்கிறேன்” என்றார். chennai women share terrorst attack
