தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 5) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று (அக்டோபர் 4) கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி என பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.
அதிகபட்சமாக கடலூர் மெ.மாத்தூரில் 13 செ.மீ மழையும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி தக்கலையில் 1 செ.மீ. மழையும் பதிவானது.
சென்னையில் இன்று மதியம் முதல் மழை பெய்து வருவதால் சென்னை முழுவதும் குளுமையான சூழல் நிலவுகிறது.
வெப்பநிலையை பொறுத்தவரை திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் 38.9° செல்சியசஸும், ஈரோட்டில் 18.5° செல்சியஸும் பதிவானது. இந்த நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“05.10.2024: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
06.10.2024:நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்
05.10.2024 மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
07.10.2024 முதல் 09.10.2024: லட்சத்தீவு பகுதிகளை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
05.10.2024: தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் : கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது!
”வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும்” : சேகர்பாபு உறுதி!
ஒரே ஆபரேசனில் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை : சத்தீஸ்கரில் இது முதன்முறை!