சென்னை வானிலை அறிவிப்பில் இந்தி… திடீர் அமல் ஏன்?

Published On:

| By Kavi

தமிழகத்தில் வானிலை அறிவிப்பு இதுவரை இரு மொழியில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்றாவது மொழியாக இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது. Chennai weather forecast in Hindi

தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்  ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் வானிலை அறிவிப்பு வெளியாகும்.

இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் ஆங்கிலம், தமிழோடு சேர்த்து  இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது. 

மும்மொழி கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இந்தி சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

இந்திய வானிலை மைய அதிகாரிகள் அறிவுறுத்தலால், இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியில் முன்னறிவிப்பு வெளியிட சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மொழிப்பெயர்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தி சேர்க்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது. பாஜகவிற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார். Chennai weather forecast in Hindi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share