சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் இரண்டு தண்ணீர் நிரப்பும் நிலையங்களில் ஒரு நிலையம் கடந்த ஒரு மாத காலமாக பழுதடைந்துள்ளது. இதை சரி செய்யாததால் தண்ணீர் நிரப்பும் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
லாரிகளுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். இதன் காரணமாக சென்னை முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் தண்ணீர் லாரிகள் இன்று (ஜூன் 1) வழக்கம்போல் இயங்கும் என அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், செயல்படாமல் இருந்த தண்ணீர் நிரப்பும் நிலையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து சரி செய்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
