வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று (அக்டோபர் 16) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
10 மணி நிலவரப்படி…
மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்
1. CB சாலை சுரங்கப்பாதை
2. கணேசபுரம்
மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்கின்றன.
1. வி.என் பாலம்
2. இளையா தெரு
3. புளு ஸ்டார்
4. நாகாஸ் பாயிண்ட் நுங்கம்பாக்கம்
5. மெட்டுக்குளம் முதல் மார்க்கெட் “பி” ரோடு வரை
6. ரோடு வரை
7. செந்தில் நகர்
8. கன்னிகாபுரம்
7. டெமோல்லஸ் சாலை
9. மாதாவரம் நெடுஞ்சாலை
10. மாதாவரம் முதல் வடபெரும்பாக்கம் (Diversion GNT Road)
11. மில்லர்ஸ் சாலை
12.பெரியார் பாதை
13. எம்ஜிஆர் சாலை (Near Food Court)
போக்குவரத்து மாற்றம்
தீயணைப்பு துறை “இ” ரோடு மற்றும் “பி” ரோடு வழியாக மேட்டுக்குளத்திற்கு இடையே இருபுறமும் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் விழுந்த மரம் கீழே விழுந்த மரங்கள், அனைத்தும் வெட்டி அகற்றப்பட்டன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அம்மா உணவகங்களில் 2 நாட்களுக்கு உணவு இலவசம் : ஸ்டாலின் உத்தரவு!