சென்னை டு அயோத்தி: விமான சேவை எப்போது?

Published On:

| By Selvam

ராமர் கோயிலுக்கு கடந்த 23-ம் தேதி முதல் பொது மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று (ஜனவரி 31) முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தொடங்கி வைக்கிறார்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 22-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. ராமர் கோயிலுக்குக் கடந்த 23-ம் தேதி முதல் பொதுமக்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. இதையொட்டி சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை இன்று (ஜனவரி 31) முதல் தொடங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதற்கான விமான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்கனவே தொடங்கியது. சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை கட்டணம் ரூ.6,499 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து அயோத்திக்கு பகல் 12:40-க்கு புறப்படும் விமானம் மாலை 3:15-க்கு சென்றடையும். அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்குப்  புறப்படும் விமானம் மாலை 6:20-க்கு சென்னை வந்து சேரும்.

ADVERTISEMENT

இதேபோல், மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியில் இருந்து நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது. மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இந்த விமான சேவையை தொடங்கி வைக்கிறார்.

ராஜ்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: சருமம் பளபளக்க… வீட்டிலேயே வெந்தய பேக்!

கிச்சன் கீர்த்தனா: ஸ்பைசி பொட்டேடோ பாஸ்தா

சண்டிகர் சாம்பிள் : அப்டேட் குமாரு

சர்ச்சையான சண்டிகர் மேயர் தேர்தல் : நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share