சென்னையில் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையை தவிர மற்ற அனைத்து சுரங்க பாதைகளிலும் தேங்கிய மழை நீர் அகற்றப்பட்டு விட்டதாக சென்னை மாநகராட்சி இன்று (நவம்பர் 30) தெரிவித்துள்ளது.
இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னையில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் வெள்ள நீர் தேங்கியது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மழை நீர் தேங்கிய பகுதிகளை நேற்று இரவு ஆய்வு செய்தனர். மேலும் மழை நீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இரவு முழுவதும் நீர் தேங்கிய இடங்களில் மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். கனமழை காரணமாக சென்னையில் மட்டும் நேற்று 8 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனை துரிதமாக மாநகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.

மேலும் சென்னையில் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையை தவிர அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வருகிறது.
கனமழை காரணமாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐந்து மாநில தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியீடு!
வேளாண் பணிகளில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு டிரோன்கள்!
