மாண்டஸ்: புறநகர் ரயில்கள் இயக்கப்படுமா?

Published On:

| By Kavi

மாண்டஸ் புயல் காரணமாக இன்று (டிசம்பர் 9) இரவு சென்னையில் பேருந்து போக்குவரத்து சேவை இருக்காது என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், ‘இந்திய வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்ததை தொடர்ந்து, ட்ராக்மேன், ஸ்டேஷன் மாஸ்டர்ஸ், பொறியாளர்கள், சிக்னல்களை சரிபார்க்கும் ஊழியர்கள் ஆகியோர் தயார் நிலையில் இருக்கின்றனர்.

தண்டவாளங்களில் மரம் விழுந்தால் அதனை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் உள்ள ரயில் பாதை, மேம்பாலங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. பேரிடர் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் இயங்கும்.

ரயில் பயணிகள் 044-25330714, 044-25330952 ஆகிய உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம். சூழ்நிலைக்கு ஏற்ப ரயில்களை ரத்து செய்ய முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிரியா

வாஷிங்டன் சுந்தர் புதையலை போன்றவர்:பாராட்டிய முன்னாள் வீரர்!

காற்றடித்தால் பவர் கட்: மின்வாரியம் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share