திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த புதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் இன்று (அக்டோபர் 12) அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாடியநல்லூர் முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடிகள் முத்து சரவணன், சதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் தலைமறைவான இருவரும் புதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் பிடிக்க முயன்றபோது தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.
இதனால் போலீசார் தற்காப்புக்காக முத்து சரவணன், சதீஷ் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் முத்து சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த சதீஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
ரவுடிகள் தாக்குதலில் காயமடைந்த நெவிபிரபு, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ் ஆகிய காவலர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செல்வம்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
