இன்று இரவு முதல் ஒருவழிப்பாதையாகும் சென்னையின் முக்கிய சுரங்கப்பாதை!

Published On:

| By christopher

Chennai RBI Tunnel one-way

தெற்கு ரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் நான்காவது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், இன்று (ஏப்ரல் 26) இரவு 10 மணி முதல் ஒருவழிப்பாதையாகிறது, சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை.

ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (போர் நினைவிடம் நோக்கி) அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அணுகு சாலை, வடக்கு கோட்டை சாலை (NFS Road),  ராஜா அண்ணாமலை மன்றம் முத்துசாமி சாலை,  டாக்டர் முத்துசாமி பாலம், வாலாஜா பாயிண்ட் கொடி மர சாலை, போர் நினைவுச்சின்னம் வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.

காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக வழக்கம் போல் இயக்கப்படும். அனைத்து வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பை நல்குமாறு சென்னை போக்குவரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.   மேலும் மூன்று மாத காலத்துக்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பப்பட் ரோல்

கடைசியில மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டேனே: அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: மோடிக்கு எத்தனை சீட் கிடைக்கும்? – ஸ்டாலின் கணிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share