உலகளவில் அதிக விபத்துகள் நடக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை, இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பு, உலகம் முழுவதிலும் உள்ள 47நகரங்களில் நேரும் விபத்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒரு லட்சம்பேரில் 26.6 உயிரிழப்புவிகிதமாக சென்னையில் நிலவுகிறது. முதல் இடத்தில் பிரேசில் நாட்டின் தலைநகரான பிரேசிலியா உள்ளது. இந்தப் பட்டியலில் ஜெய்ப்பூர் நான்காவது இடத்திலும், இந்தூர் 16வது இடத்திலும், கொல்கத்தா, டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்கள் முறையே 23, 24 மற்றும் 25வது இடத்தில் உள்ளன. மும்பைக்கு இந்தப் பட்டியலில் 40வது இடம் கிடைத்துள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஒரு லட்சம் பேருக்கு 0.7 என விபத்தால் நேரும் இறப்புவிகிதமாக உள்ளது.
