அடுத்த கனமழை: தேதி சொன்ன வெதர்மேன்!

Published On:

| By christopher

அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழக கடற்கரையை நோக்கி எப்போது வரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது.

ADVERTISEMENT

இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ”ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

ADVERTISEMENT

இதன் காரணமாக தமிழகத்தில் 12 ஆம் தேதி (இன்று) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,

திருவாரூர், நீலகிரி,கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 17 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.” என்று தெரிவித்து இருந்தது.

ADVERTISEMENT

வெதர்மேன் அறிக்கை!

”அடுத்த 2 நாளுக்கு தென் தமிழகத்தில் சம்பவம் இருக்கு!” – எச்சரிக்கும் வெதர்மேன்

தமிழ்நாட்டில் இன்றைய வானிலை தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், ”கடைசியில் தென்சென்னை, வடசென்னையில் பெய்த மழை, தற்போது நகருக்குள் நகர்கிறது.

அடையாறு, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்சமாக 78 மி.மீ மழை பெய்துள்ளது. மேற்கு பகுதியில் ஆவடி வரையிலும், அடையாறு, பெருங்குடி, மடிப்பாக்கம், கிண்டி, சைதைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

chennai rain today in weatherman report

சென்னையில் கனமழை!

சென்னையை ஒட்டிய கடல் பகுதியில் மேலும் மேகங்கள் உருவாகி வருவதால் அடுத்த சில மணி நேரங்களுக்கு சென்னையில் தீவிர அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் 100 மி.மீ மழை பெய்யக்கூடும்.

கேளம்பாக்கம், கோவளம், திருப்போரூர் முட்டுக்காடு ஆகிய ஈசிஆர் பகுதிகளில் கனமழையும் பெய்துள்ளது.

அதே வேளையில் இன்று சென்னையில் சில இடங்களில் வெயில் உச்சம் பெறும் மற்றும் ஆங்காங்கே திடீரென மழை பெய்யும். நாளையும் இந்த நிலையே நீடிக்கும்.

chennai rain today in weatherman report

சீர்காழியில் 436 மி.மீ மழை!

காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மேக மூட்டத்தால் ஏற்பட்ட தீவிரம் காரணமாக மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்துள்ளது.

சீர்காழியில் இன்று வரை கடந்த 24 மணி நேரத்தில் 436 மி. மீ மழை பதிவாகி உள்ளது. இதன்மூலம் நேற்று பெய்த 111 மி. மீ. மழையையும் சேர்த்து சுமார் 550 மி. மீ மழை பெய்துள்ளது.

பெரம்பலூர், விழுப்புரம், மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் இரவு பகலாக நல்ல மழை பெய்துள்ளது.

அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை!

வரும் நவம்பர் 19, 20 க்குள் அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழக கடற்கரையை நோக்கி வரும்.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கனமழை எதிரொலி: 25 மாவட்டங்களுக்கு விடுமுறை!

இளமை இதோ இதோ : அழகிகளுடன் ‘ஆண்டவர்’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share