இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

Published On:

| By Jegadeesh

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜனவரி 3 ) தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

கடலூரில் சோகம்: நள்ளிரவில் கோர விபத்து!

ADVERTISEMENT

“அண்ணாமலைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”: பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி

Photo of author
Jegadeesh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share