திமுக எம்எல்ஏ மகன்,மருமகள் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
பல்லாவரம் திமுக எம்எல்ஏவாக கருணாநிதி உள்ளார். இவரது மகன் ஆண்டோ மதிவாணன் தனது மனைவி மெர்லினாவுடன் திருவான்மியூரில் வசித்து வந்தார்.
இவர்களது வீட்டில் பணி செய்து வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரேகா என்ற பணிப் பெண்ணை கொடுமைப்படுத்தியதாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரும் தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் தனிப்படை போலீசாரிடம் சரணடைந்தனர்.
அவர்களை கைது செய்து அழைத்து வந்த போலீசார் எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி ஆனந்த், முன்பு ஆஜர்ப்படுத்தினர். அப்போது பிப்ரவரி 9ஆம் தேதி வரை இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி,
“பணிப்பெண் ரேகாவுக்கு கல்வி செலவுக்காக 2 லட்சத்தை மனுதாரர்கள் செலவு செய்துள்ளனர். எம்எல்ஏ மகன் என்பதால் சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இவ்விவகாரத்தில் போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
பணிப்பெண் ரேகா தரப்பில் வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகி,
எஸ்சி., எஸ்டி., பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் டிஎஸ்பி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி தான் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும். இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான் உண்மைகள் தெரியவரும்.
வீட்டுப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று சட்டம் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. இவர்கள் மீது போக்சோ பிரிவிலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருக்கின்றனர்” என்று வாதாடினார்.
இந்த நிலையில் மனுதாரர் தரப்பில்,
“இந்த வழக்கில் எஸ்சி., எஸ்டி சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பக்கம் முக்கிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டு இருப்பார்கள்” என கேள்வி எழுப்பினார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம் சுதாகர், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
இலையில் இன்று (பிப்ரவரி 6) இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொந்தளித்த ரோஹித் சர்மா மனைவி… மும்பை இந்தியன்ஸ் ‘இமேஜ்’ டோட்டலா காலி!
டிஜிட்டல் திண்ணை: ராமதாஸ் அதிமுகவோடு… அன்புமணி பாஜகவோடு… தைலாபுரத்தில் கூட்டணி டைலாமோ!