ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலியாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (ஜூலை 8) அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரம்பூரில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து தலைநகரிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அவர் தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக உள்ள அருண் தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!
’விழுப்புரத்திற்கு திமுக அரசு அநீதி’ : உதயநிதி பேச்சை சுட்டிக்காட்டி அன்புமணி குற்றச்சாட்டு!