கடல்நீரை குடிநீராக்கும் புதிய ஆலைக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் 21-ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவுக்கு ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
மாமல்லபுரம் அடுத்த பேரூர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், 4276.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும், மூன்றாவது புதிய ஆலைக்கு வரும் 21ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த ஆலையின் கட்டுமான பணிகள் 42 மாதங்களில் நிறைவடைந்து, சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த விழா நடைபெறும் பகுதி மற்றும் அங்கு அமைக்கப்பட்டு வரும் தற்காலிக அலுவலக கட்டடம் கட்டும் பகுதிகளை நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் சூலேரிக்காட்டில் நடைபெற்று வரும் இரண்டாவது ஆலையின் பணிகளையும் ஆய்வு செய்தனர். மேலும் முதலமைச்சர் பங்கேற்கும் விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேடை, அரங்கம் அமைக்கும் ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: சென்னா ரைஸ்
கண்ணகி கோபத்தால் சரிந்த பாண்டியன் செங்கோல் தெரியுமா? -மக்களவையில் கனிமொழி ஆவேசம்!