தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா இன்று (செப்டம்பர் 7) வெளியிட்டுள்ள உத்தரவில்,
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளர் நந்தகோபால், தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை ஆணையராகவும்,
தமிழ்நாடு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் ராஷ்மி சித்தார்த் சகடே சென்னை மாவட்ட ஆட்சியராகவும்,
சென்னை ஆட்சியர் அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும்,
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் நில நிர்வாக துறை இணை ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
